அமித் ஷாவை ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் சந்திக்க போலீஸ் மறுப்பு!

Share this News:

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லி ஷாஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வரும் போராட்டக் காரர்கள், மத்திய அமைச்சர் அமித் ஷா வீட்டிற்கு பேரணியாக சென்று சந்திக்கவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் டெல்லி போலீஸ் அதற்கு அனுமதி மறுத்துள்ளது.

தொலைக்காட்சி நேர்காணலில் டெல்லி தோல்வி குறித்து பேசியிருந்த அமித் ஷா, ஷாஹீன் பாக் எதிர்ப்பாளர்கள் உட்பட யாருடனும் CAA குறித்து கலந்துரையாட தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். அதனை அடுத்து அமித் ஷாவை சந்திக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

ஆனால் ஷஹீன் பாக் போராட்டக் காரர்களுடன் சந்திக்க அமித் ஷா விருப்பம் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து டெல்லி போலீஸ் அனுமதி மறுத்துள்ளனர்.

முன்னதாக போராட்டக் காரர்கள் டெல்லி போலீசிடம் அனுமதி கோரி மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply