புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. இந்த வன்முறையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் வன்முறை பகுதிகளான மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் தவிர சாந்த் பாக், பஜன்பூரா உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையாளர்கள் மீது கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.