புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லி வன்முறையின்போது மசூதி மீது தீ வைத்ததோடு, மசூதியை கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கியுள்ளனர் வன்முறையாளர்கள்.
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. இந்த வன்முறையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் வன்முறையாளர்கள் மசூதி மீது தீ வைத்துள்ளது, மேலும் மசூதி மினாராவை இடித்து, ஒலிபெருக்கியையும் தூக்கி வீசுவதோடு, இந்துத்வா கொடியை மசூதியில் ஏந்தி நிற்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
This is not ayodhya 1992, this is Ashok Nagar area of India capital Delhi 25th feb 2020
This is happening in India’s national capital.#IndiaAgainstCAA@PTI_News @DXBMediaOffice @UAE @SaudiMCI @RTErdogan @Iran_GOV @UNHumanRights @cnni @allahim @KingSalman@kingsaud pic.twitter.com/7yDaLRIpCA
— Naushad Ahamad 💙 (@Naushad73818387) February 25, 2020
இவ்விவகாரம் டெல்லியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.