மும்பை (30 ஜன 2020): டாக்டர் கபீல்கான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திர பிரதேசம் அலிகார் பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதாகவும், மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாகவும் அவர் மீது சென்ற மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு, கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் பல குழந்தைகள் பலியான நிலையில் ஆக்சிஜனுக்கு தன் சொந்த பணத்தில் உதவி புரிந்தபோதும் அவர் மீது வழக்கு பதிவு செய்த உபி போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இவ்விவகாரம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. எனினும் அவர் மீது குற்றம் நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது சிஏஏ விவகாரம் தொடர்பாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.