நிர்வாணமாக்கி சித்ரவதை செய்யப்பட்டேன்: சிறை அனுபவங்கள் குறித்து டாக்டர் கஃபீல்கான்!

பெங்களூரு (06 டிச 2022): கோராக்பூர் சம்பவத்திற்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் கஃபீல்கான், தனது சிறை அனுபவங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார். பெங்களூரில் நடந்த எழுத்தறிவு விழா நிகழ்வின் போது, “கோரக்பூர் மருத்துவமனை சோகம்” என்ற புத்தகத்தைப் பற்றி பேசினார். அப்போது, “சிறையில் என்னை நிர்வாணமாக்கி, பெல்ட் மற்றும் லத்தி தடி போன்றவற்றால் தாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டேன். மூன்று முதல் நான்கு நாட்கள் காவலில் இருந்தும், போலீசார் உணவு வழங்கவில்லை. வெளியில் சிக்கன், இட்லி தோசை, கேக்…

மேலும்...

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கபில் கான் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு!

லக்னோ (27 ஜன 2022): உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து மருத்துவர் கஃபீல் கான் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017 ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் இறந்ததில் குற்றம் சாட்டப்பட்டு குற்றமற்றவர் என விடுதலையான குழந்தை மருத்துவர் கஃபீல் கான். இவர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூரில் போட்டியிட தயாராக…

மேலும்...

குழந்தைகள் உயிரிழப்புக்கு அரசே காரணம் – நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிருப்பிப்பேன்: டாக்டர் கஃபீல்கான்!

புதுடெல்லி (11 நவ 2021): உத்திர பிரதேசத்தில் கடந்த 2017ல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் மரணிக்க அரசே காரணம் அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று டாக்டர் கஃபீல்கான் தெரிவித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் இயங்கும் மக்கள் விரோத அரசான யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும்…

மேலும்...

டாக்டர் கஃபீல்கான் அரசுப் பணியிலிருந்து நீக்கம் – உத்திர பிரதேச அரசின் அராஜகம்!

லக்னோ (11 நவ 2021): உத்திர பிரதேச அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கஃபீல்கான் அரசுப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசத்தில் இயங்கும் மக்கள் விரோத அரசான யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை காடவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசின் கையாலாகதத் தனத்தால்…

மேலும்...

யோகி ஆதித்யநாத் அரசுக்கு பலத்த அடி – டாக்டர் கஃபீல்கானுக்கு எதிரான மனு உச்சநீதிமன்றம் நிராகரிப்பு!

புதுடெல்லி (17 டிச 2020): யோகி ஆதித்யநாத் அரசு டாக்டர். கபீல்கான் மீது சுமத்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை (என்எஸ்ஏ) ரத்து செய்ததற்கு எதிராக உ.பி. அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. டாக்டர் கபில் கான் மீது சுமத்தப் பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் செல்லாது என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை ரத்து செய்யக் கோரி உத்தரபிரதேச அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு…

மேலும்...

பிரதமர் மோடிக்கு சிறையிலிருக்கும் டாக்டர் கஃபீல் கான் கடிதம்!

லக்னோ (26 மார்ச் 2020): கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு டாக்டர் கஃபீல் கான் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,”கொரோனா வைரஸை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டிய நேரம் இது. எனவே நாட்டில் நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு, கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு என்னால் ஆன முயற்சியையும் மேற்கொள்ளும் விதமாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுகிறேன். மேலும் மாவட்டம் முழுவதும் குறைந்தது…

மேலும்...

என் கணவரின் உயிருக்கு ஆபத்து – டாக்டர் கபீல்கான் மனைவி தலைமை நீதிபதிக்கு கடிதம்!

லக்னோ (01 மார்ச் 2020): “என கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது” என்று டாக்டர் கஃபீல்கான் மனைவி சபிஸ்தா கான், அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் உயிரிழந்தன. ஆனால், டாக்டர் கபீல்கான் தன் சொந்த பணத்தில் ஆக்சிஜன் வாங்கி பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றினார். கபீல்கானின் நடவடிக்கையால் எனினும் அவர் மீது பழி சுமத்தி வேலையை விட்டு நீக்கியது யோகி ஆதித்யநாத் அரசு மேலும் அவரை…

மேலும்...

கோராக்பூர் டாக்டர் கஃபீல்கானின் மாமா சுட்டுக் கொலை!

லக்னோ (25 பிப் 2020): கோராக்பூர் டாக்டர் கஃபீல்கானின் தாய்வழி மாமா சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் கோராக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த நேரத்தில் தன் சொந்த செலவைல் ஆக்சிஜன் வாங்கி பல குழந்தைகளை காப்பாற்றி புகழ் பெற்றவர் டாக்டர் கஃபீல் கான். ஆனால் அவர் மேலேயே பழி போட்டு சிறையில் தள்ளியது அரசு. அதேவேளை அவர் மீதான குற்றம் நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர்…

மேலும்...

சிஏஏ வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் டாக்டர் கபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது!

லக்னோ (14 பிப் 2020): டாக்டர் கபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் அலிகார் பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதாகவும், மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாகவும் உத்திர பிரதேச அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் அவர் வரும் திங்கள் கிழமை ஜாமீனில் வெளியாவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மீது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்…

மேலும்...

டாக்டர் கபீல்கான் மீண்டும் கைது!

மும்பை (30 ஜன 2020): டாக்டர் கபீல்கான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் அலிகார் பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதாகவும், மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாகவும் அவர் மீது சென்ற மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு, கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் பல குழந்தைகள் பலியான நிலையில் ஆக்சிஜனுக்கு தன் சொந்த பணத்தில் உதவி புரிந்தபோதும் அவர் மீது வழக்கு…

மேலும்...