பாட்னா (09 ஜன 2023): இண்டிகோ விமானத்தில் மதுபோதையில் பயணிகளிடம் மூன்று பேர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி – பாட்னா இண்டிகோ விமானத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் வயதான பெண் மீது சிறுநீர் கழித்த சம்பவத்தை அடுத்து விமானத்தில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
குடிபோதையில் 3 பேர் கொண்ட கும்பல் விமானத்தில் ஏறி சத்தம் போட்டுள்ளனர். இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டபோது விமான பணிப்பெண் தலையிட்டார். ஆனால் விமானப் பணிப்பெண்ணை கும்பல் தொடர்ந்து தாக்கியது.
பாட்னாவை அடைந்த உடனேயே, குழுவின் இரண்டு உறுப்பினர்கள் சிஐஎஸ்எஃப் வசம் ஒப்படைக்கப்பட்டனர். பாட்னா விமான நிலையத்தில் இருந்து ஒருவர் தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ள இண்டிகோ விமான நிறுவனமும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக விளக்கமளித்துள்ளது.