புதுடெல்லி (05 டிச 2022): கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் குறித்து மாநில அரசுகளின் விரிவான பிரமாணப் பத்திரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாய மத மாற்றம் நாட்டில் பரவலாக நடைபெறுவதாக சுட்டிக் காட்டி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று பரிசீலித்தது.
இந்த மனு இம்மாதம் 12ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தனிநபர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மத மாற்றம் தொடர்பாக மாநில அரசுகள் கொண்டு வர இருக்கும் சட்டங்கள் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து மத்திய அரசு தெளிவான பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி எம்.ஆர். ஷா உத்தரவிட்டுள்ளார்.