ஆமதாபாத் (08 டிச 2022): குஜராத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் முன்னேறி வரும் நிலையில், பாஜகவின் அல்பேஷ் தாக்கூர், ஹர்திக் படேல் ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.ப்ஜிக்னேஷ் மேவானி முன்னிலையில் உள்ளார்.
குஜராத் முதல்வர் வேட்பாளர் பூபேந்திர படேல் முன்னிலை வகிக்கிறார். வட்காமில் ஜிக்னேஷ் மேவானியும், கம்பலியாவில் ஆப்ஸின் இசுடன் காட்வியும் முன்னேறி வருகின்றனர். காந்தி நகர் தெற்கில் அல்பேஷ் தாக்கூர் பின்தங்கியுள்ளார்.
விரங்கத்திலும் ஹர்திக் படேல் பின்தங்கியுள்ளார். ஜாம்நகரில் பாஜகவின் ரிவாபா ஜடேஜாவும் முன்னிலை வகிக்கிறார்.
காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறிய ஹர்திக் படேல் பெரிய வெற்றியை எதிர்பார்த்தார் ஆனால் அவர் பின்னடைவில் உள்ளார்