குஜராத்தில் முஸ்லிம் வாக்குகளைப் பிரித்த உவைசி!

Share this News:

ஆமதாபாத் (08 டிச 2022): குஜராத்தில் வெல்ல முடியாது என்ற நிலையில் வேண்டுமென்றே வேட்பாளர்களை நிறுத்தி, அசாதுத்தீன் உவைசி முஸ்லிம் வாக்குகளை பிரிக்கும் நிலை தற்போதும் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக முஸ்லிம் வாக்குகளை உவைசி பிரித்துவிடுவார் என்ற கணிப்பு எல்லா தேர்தல்களிலும் இருந்து வருகிறது. பாஜகவின் பி-டீமாக உவைசி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் பரவலாகவும், வலுவாகவும் உவைசி மீது உள்ளன.

பாஜகவுக்கு எதிரான ஓட்டுக்கள், காங்கிரஸ், மற்றும் ஆம் ஆத்மிக்கு பிரிந்து போக சூழல் உள்ளது. குஜராத்தில் மஜ்லீஸ் கட்சியால் வெல்ல முடியாது என்று தெரிந்தும், ஓவைசி வேட்பாளர்களை இறக்கி உள்ளது ஏன்? என்ற கேள்விக் கணை களத்தில் எழுகின்றன.

அந்தவகையில், எப்படிப் பார்த்தாலும், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் பாஜகவுக்கே இது சாதமாக அமையும் என்றும், அது இந்த தேர்தலிலும் பிரதிபலித்துள்ளது.


Share this News:

Leave a Reply