பாட்னா (27 ஜன 2020): சீனாவில் இருந்து இந்தியா வந்த 29 வயது பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் அவர் பாட்னா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஏக்தா குமாரி. இவர், சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள டியான்ஸின் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி தொடர்பாக பயின்று வந்தார்.
சமீபத்தில் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய ஏக்தாவுக்கு, உடல் ரீதியிலான சிரமங்கள் ஏற்பட்டன. இதனால், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உடனடியாக அவர் மருத்துவ பரிசோதனைக்காக தாமாகவே முன்வந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக அவருக்கு முதற்கட்ட சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.