லக்னோ (27 ஜன 2022): உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து மருத்துவர் கஃபீல் கான் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2017 ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் இறந்ததில் குற்றம் சாட்டப்பட்டு குற்றமற்றவர் என விடுதலையான குழந்தை மருத்துவர் கஃபீல் கான். இவர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூரில் போட்டியிட தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூரில் காங்கிரஸ் வேட்பாளராக கஃபீல் கான் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதற்காக கஃபீல் கானுக்கும் காங்கிரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.