பெண்கள் மீதான மரியாதை இதுதானா? – மோடி மீது மல்லிகார்ஜுன் கார்கே கடும் விமர்சனம்!

Share this News:

புதுடெல்லி (21 அக் 2022): பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்ததை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கே இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், “பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்ததை பாஜக கேபினட் அமைச்சர் நியாயப்படுத்துகிறார், மற்றொரு கற்பழிப்பு குற்றவாளியின் நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். பெண்களுக்கு மரியாதை என்று பிரதமர் போதித்தது இதுதானா?’ என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களுக்கான மரியாதையே இந்தியாவின் வளர்ச்சியின் முக்கிய தூண் என்று பிரதமர் மோடி கூறியதை கார்கேவின் விமர்சனம் சுட்டிக்காட்டியுள்ளது.

2002 குஜராத் இனப்படுகொலையின் போது, ​​கர்ப்பிணி பில்கிஸ் பானுவை பாலியல் பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொன்ற வழக்கில் 11 பேர் தண்டனையை முடிக்கும் முன்பே குஜராத் பாஜக அரசால் விடுவிக்கப்பட்டனர். மத்திய அரசின் உத்தரவின்படியே குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதாக குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply