காரைக்கால் (21 அக் 2022): கோடியக்கரை அருகே மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்காலிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தத்போது, ஹெலிகாப்டரில் வந்த கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மயிலாடுதுறை மீனவர் வீரவேல் காயமடைந்துள்ளார். தற்போது அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காயமடைந்த 9 மீனவர்கள் கடற்படை முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியது இந்திய கடற்படையினர் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதை இந்திய கடற்படை மறுத்துள்ளது.