அர்ணாபிடம் கேள்வி கேட்டதற்காக பிரபல காமெடியனுக்கு விமானத்தில் பயணிக்க தடை!

Share this News:

புதுடெல்லி (29 ஜன 2020): பிரபல ஊடகவியலாளரும் பாஜக ஆதரவாளருமான அர்ணாப் கோஸ்வாமியிடம் விமானத்தில் கேள்வி கேட்டதற்காக 6 மாதம் விமானத்தில் பயணிக்க பிரபல காமெடியனுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா டெல்லியிலிருந்து லக்னோவுக்கு இன்டிகோ விமானத்தில் பயணிக்கும்போது அவருடன் அர்ணாபும் பயணித்துள்ளார், இதுகுறித்த வீடியோ ஒன்றை குணால் வெளியிட்டுள்ளார், அப்போது அர்னாப் கோஸ்வாமியிடம் பல கேள்விகளை எழுப்புகிறார். ஆனால் அர்னாப் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்கிறார். மேலும் நீங்கள் கோழையா.. இல்லை தேசியவாதியா எனக் கேள்வி எழுப்புகிறார். எதற்கும் அவர் பதிலளிக்கவில்லை.

மேலும் பேசியுள்ள அவர், “நான் இதை ரோஹித் வெமுலாவிற்காகச் செய்கிறேன். ரோஹித் எழுதிய 10 பக்க தற்கொலைக் கடிதத்தை வாசிக்க நேரம் தேடுங்கள். உங்களுக்கு கொஞ்சமாவது இதயம் இருந்தால் இதைச் செய்யலாம்.” எனத் தெரிவித்துள்ளார். அதேவேளை அர்ணாபை தகாத வார்த்தைகளாலும் பேசியதாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இச்சம்பவத்திற்காக இண்டிகோ விமானம் குணால் கம்ராவுக்கு 6 மாதங்கள் இண்டிகோ விமானத்தில் பயணிக்க தடை விதித்துள்ளது.


Share this News:

Leave a Reply