புதுடெல்லி (01 பிப் 2020): பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா இண்டிகோ விமான நிறுவனத்தில் ரூ 25 லட்சம் நஷ்ட ஈடுகேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா டெல்லியிலிருந்து லக்னோவுக்கு இண்டிகோ விமானத்தில் பயணிக்கும்போது அவருடன் அர்ணாபும் பயணித்துள்ளார், அப்போது அர்னாப் கோஸ்வாமியிடம் பல கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு அர்ணாப் பதிலளிக்கவில்லை. இதனை வீடியோவாகவும் வெளியிட்டிருந்தார் குணால் கம்ரா.
இந்நிலையில் அவர் பயணித்த இண்டிகோ விமான நிறுவனம் குணால் கம்ராவுக்கு 6 மாதங்கள் பயணிக்க தடை விதித்திருந்தது.
இந்த தடையை எதிர்த்து குணால் கம்ரா இண்டிகோ நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘தடையின் மூலம் மன உளைச்சல் அடைந்ததாகவும் மேலும் திட்டம் தீட்டியிருந்த பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் பல லட்சங்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆகியவற்றிற்காக ரு 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், மேலும் விமான நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.