மங்களூரு (20 ஜன 2020): மங்களூரு விமான நிலையத்தில் வெடிப் பொருள் வைத்த நபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
விமான நிலைய பாதுகாப்புப் படையினர் வெடிப்பொருள் ஒன்றை கண்டு பிடித்தனர். அதை பாதுகாப்பாக தொலைவில் எடுத்து சென்று நிபுணர்களை கொண்டு பாதுகாப்பான முறையில் வெடிக்க செய்தனர்.
மேலும் அந்த வெடி பொருளை வைத்தது யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். .