தொழுகைக்கு சென்றவர்கள் மீது கும்பல் தாக்குதல்!

Share this News:

குருகிராம் (13 அக் 2022): அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள போரா கலான் பகுதியில் உள்ள மசூதிக்கு புதன்கிழமை மாலை தொழுகைக்கு வந்தவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஒரு கும்பல் மசூதியையும் சேதப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த சுபேதார் நாசர் முஹம்மது, போரா கலான் பகுதியில் நான்கு முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே வசித்து வருவதாக தெரிவித்தார். புதன்கிழமை அவர்கள் மசூதிக்கு தொழுகைக்காக வந்தபோது, ​​சிலர் மசூதிக்குள் புகுந்து தாக்கினர். இனி இங்கு தங்கக்கூடாது என்றும், அப்பகுதியை விட்டு வெளியேறுமாறும் மிரட்டியதாக நாசர் முகமது தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராஜேஷ் சவுகான், அனில் பதவுரியா மற்றும் சஞ்சய் வியாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Share this News:

Leave a Reply