கல்லறைக்கு அனுப்படுவீர்கள் – வீடுகளை இடிப்போம் – காவல்துறை அதிகாரியின் துவேஷ பேச்சு!

Share this News:

லக்னோ (13 அக் 2022): உத்திர பிரதேசத்தில் துர்கா பூஜைக்கு தடையாக இருப்பவர்கள் கல்லறைக்கு அனுப்பப்படுவீர்கள், உங்கள் வீடுகள் புல்டோசர் வைத்து இடிக்கப்படும் என்று ஒரு காவல்துறை அதிகாரி துவேஷத்துடன் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

காடந்த 10 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள பல்திராயா பகுதியில் நடந்த துர்கா பூஜை ஊர்வலத்தின்போது, ஊர்வலம் ஒரு மசூதியை நெருங்கியபோது, ஊர்வலத்தில் ஒழிக்கப்பட்ட பாடல் ​​உரத்த குரலில் பாடியதால் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், ஒரு போலீஸ்காரர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரணி மசூதியை நெருங்கியதும் காவி தொப்பி அணிந்த நூற்றுக்கணக்கானோர் வாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் வாள்களுடன் நடனமாடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த மோதல் தொடர்பாக போலீசார் பதிவு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 52 பேரில் 51 பேர் முஸ்லிம்கள். இந்நிலையில் காவல்துறை அதிகாரி பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Share this News:

Leave a Reply