பீஜிங் (06 பிப் 2020): சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசால் இதுவரை, 563 பேர் உயிரிழந்துள்ளனர்; 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர்
இந்ந்நிலையில் வுஹான் நகரில் உள்ள மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு கடந்த 10 நாட்களாக, ஓய்வுறக்கமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த, சாங் யிங்கீ என்ற, 28 வயதான இளம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.