கொரோனாவால் அலறும் மும்பை – 13,564 பேர் பாதிப்பு 508 பேர் பலி!

Share this News:

மும்பை (11 மே 2020): மும்பையில் மட்டும் கொரோனாவால் 13 ஆயிரத்து 564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 508 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்‍கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 22 ஆயிரத்து 171 பேருக்‍கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தலைநகர் மும்பையில் மட்டும் வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 13 ஆயிரத்து 564-ஆக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 508-ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே மும்பை ஆர்தர் சாலை சிறையில், காவலர்கள், கைதிகள் என 158 பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த சிறைச்சாலையில் உள்ள சுமார் 5 ஆயிரம் கைதிகளை பரோலில் விடுவிக்‍க நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Share this News: