குருகிராம் (10 அக் 2022): உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82.
டெல்லி அருகே குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.
சிறுநீரக பிரச்சனைகள் தவிர, உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றால் முலாயமின் உடல்நிலை மோசமடைந்தது. உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், ஐசியூவில் இருந்து சிசியூவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் முலாயம் சிங் யாதவ் இன்று உயிரிழந்தார்.