பிரதமர் மோடியின் தாய் காலமானார்!

அகமதாபாத் (30 டிச 2022): பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் மோடி காலமானார் உடல் நலக்குறைவால் குஜராத் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹீராபென் மோடி இன்று (30 டிச 2022) வெள்ளிக்கிழமை காலமானார். இந்த தகவலை பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும்...

முலாயம் சிங் யாதவ் காலமானார்!

குருகிராம் (10 அக் 2022): உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. டெல்லி அருகே குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். சிறுநீரக பிரச்சனைகள் தவிர, உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றால் முலாயமின் உடல்நிலை மோசமடைந்தது. உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், ஐசியூவில் இருந்து சிசியூவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் முலாயம் சிங்…

மேலும்...

பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மரணம்!

மும்பை (06 feb 2022): பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 92. லதா மங்கேஷ்கர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு ஜனவரி முதல் வாரத்தில் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் ஐசியூவில் இருந்து மாற்றப்பட்டார். எனினும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கண்காணிப்பிற்காக ஐசியுவில் மீண்டும்…

மேலும்...

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின்.தாயார் மரணம்!

சென்னை (28 டிச 2020): பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா காலமானார். ரஹ்மானின் தாயார் காலமானதை ரஹ்மான் தாயின் புகைப்படத்துடன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் ரஹ்மான் தாயார் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும்...

குஜராத் முன்னாள் முதல்வர் கொரோனா பாதிப்பால் மரணம்!

அஹமதாபாத் (29 அக் 2020): குஜராத் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கேசுபாய் படேல் கொரோனா பாதிப்பால் காலமானார். 92 வயதற்கான கேசுபாய் படேல், மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட படேல் வியாழக்கிழமை காலை இறந்தார். டைம்ஸ் ஆப் இந்தியா படி, படேலுக்கு செப்டம்பர் மாதம் கோவிட் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அறிகுறிகள் எதுவும் இல்லை. படேல் இரண்டு முறை குஜராத்தின் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்!

புருணை (28 அக் 2020): புருணை நாட்டு இளவரசர் அஜீம் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புருணை நாட்டு சுல்தானின் வாரிசு இளவரசர் அஜிம். இவருக்கு 38 வயதாகிறது. இவர் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் இப்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்நாட்டில் 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த இளவரசர் பிரின்ஸ் புரொடக்சன்ஸ்…

மேலும்...

புகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்

மும்பை (24 செப் 2020): ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் உயிரிழந்தார். ஜோன்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 க்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனைக் குழுவில் இடம்பெற்று இருந்தார்.மேலும் மும்பையில் உள்ள ஏழு நட்சத்தி ஓட்டலில் தங்கி இருந்தார்.அங்கு அவர் மாரடைப்பால் காலமானார். ஜோன்ஸ் 1984 மற்றும் 1994 க்கு இடையில் ஆஸ்திரேலியாவுக்காக 52 டெஸ்ட் மற்றும் 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

மேலும்...

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை குரு மரணம்!

திருவனந்தபுரம் (06 ஏப் 2020): பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை குருவும் மலையாள இசையமைப்பாளருமான அர்ஜுனன் மாஸ்டர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. 1968-ல் இசையமைப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கினார் அர்ஜுனன். 200 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார். கே.ஜே. யேசுதாஸ், அர்ஜுனனின் இசையில் தான் முதலில் பாடினார். 1981-ல் அர்ஜுனன் இசையமைத்த Adimachangala என்கிற மலையாளப் படத்தில் முதல் முதலாக கீ போர்டு வாசித்தார் ரஹ்மான். இதனால் அர்ஜுனன் மீது…

மேலும்...

பிரபல தமிழ் இளம் நடிகர் திடீர் மரணம்!

சென்னை (27 மார்ச் 2020): பிரபல தமிழ் இளம் நடிகர் சேதுராமன் திடீரென மரணம் அடைந்துள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானத்துடன் நடித்திருந்தவர் நடிகர் டாக்டர் சேதுராமன். அதன் பிறகு வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் சேதுராமன் தனது 36 வது வயதில் திடீரென மரணம் அடைந்துள்ளார். அவரது மரணம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்...

பிரபல இயக்குநர், நடிகர் விசு மரணம்!

சென்னை (22 மார்ச் 2020): பிரபல இயக்குநரும் நடிகருமான விசு இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72. விசு, தமிழ் திரையுலகில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். உழைப்பாளி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர், வசனகர்த்தா, கதாசிரியராகவும் இருந்துள்ளார். இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித்…

மேலும்...