கோட்டயம் (13 மார்ச் 2020): கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர் வீட்டுக்கு அருகில் வசித்தவர் வெள்ளிக்கிழமை அன்று திடீரென மரணம் அடைந்துள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை கொரோனா வைரஸ் கேரளாவில்தான் முதலில் பரவியது. அந்த வகையில் தற்போது கேரளாவில் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
இது இப்படியிருக்க கோட்டயத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீட்டுக்கு அருகில் வசித்த ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) திடீரென மரணம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து கோட்டயம் கலெக்டர் கூறுகையில், மரணம் அடைந்தவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாகவும், எனினும் அவரது உடலிலிருந்து எடுக்கப்பட்ட திரவம் சோதனைக்கு அனுப்பட்டுள்ளதாகவும் இரண்டு நாள் கழித்துதான் அவரது மரணம் குறித்த காரணம் தெரிய வரும் என்றும் தெரிவித்துள்ளார்.