புதுடெல்லி (27 மே 2020): இந்தியா சீனா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத், மற்ற தளபதிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சீனாவின் அதிபர் ஜி ஜிங்பிங் இதேபோல் சீனாவின் ராணுவ தலைவர்கள் உடன் ஆலோசனை செய்தார். சிஎம்சி மற்றும் பிஎல்ஏ என்ற இரண்டு முக்கியமான ராணுவ படைகள் உடன் ஜி ஜிங்பிங் ஆலோசனை செய்தார்.
அப்போது சீன நாட்டு வீரர்கள் போருக்கு தயார் ஆக வேண்டும். அவர்கள் தீவிரமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். படைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தங்கள் பலத்தை அவர்கள் அதிகரிக்க வேண்டும். சீனாவை காக்க, அதன் கட்டமைக்க காக்க என்ன வேண்டுமானாலும் செய்ய அவர்கள் தயாராக இருக்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் போருக்கான ஆயத்தங்களை ராணுவம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். ராணுவ நடவடிக்கைகளை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்கான முழுமையான பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும். நாம் கொரோனாவை வென்றுவிட்டோம். இதற்கு ராணுவத்தின் தீவிரமான செயல்படும், ராணுவத்தை மையமாக கொண்ட ஆட்சியும்தான் காரணம். அதை நாம் தொடர வேண்டும்.
நாம் வித்தியாசமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நம் நாட்டு ராணுவத்தில் நாம் புரட்சியை கொண்டு வர வேண்டும். நமது பலத்தை ஒற்றுமையை நிரூபிக்க வேண்டிய நேரம் இது என்று ஜி ஜிங்பிங் கூறியுள்ளார்.
அதேவேளை தனது பேச்சில் இந்தியா குறித்து எதுவும் கூறவில்லை. இந்தியாவிற்கு எதிராக அவர் எதுவும் பேசவில்லை. அதேபோல் மற்ற நாடுகள் குறித்தும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது இப்படியிருக்க பிரதமர் மோடி இந்திய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.