வேலையின்மையைதான் பதிவு செய்ய வேண்டும் குடியுரிமையை அல்ல – பிரகாஷ்ராஜ் அதிரடி!

Share this News:

ஐதராபாத் (20 ஜன 2020): இந்தியாவில் வேலையில்லாதவர்கள்தான் அவர்கள் நிலை குறித்து பதிவு செய்ய வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று பேசிய பிரகாஷ்ராஜ், “நாட்டில் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள் அவர்கள்தான் அவர்களது நிலையை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் பலருக்கு உரிய கல்வி கிடைக்கவில்லை அதற்கான குறிக்கோள்களை அரசு முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து குடியுரிமை சட்டம் அவசியமற்றது” என்று தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply