புதுடெல்லி (20 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அஹிம்சை வழியில் போராடி வரும் ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் ஜனவரி 22 உச்ச நீதிமன்ற விசாரணைக்காக காத்திருக்கின்றனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்
டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு , கடந்த 37 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன.
இந்நிலையில் இவர்களது போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு பல முயற்சிகள் மேற்கொண்டு தோல்வியில் முடிந்துள்ளன. மேலும் சட்டத்தை திரும்பப்பெறும் வரை இந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட நகரப்போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இது இப்படியிருக்க வரும் ஜனவரி 22 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்கவுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித், “உச்ச நீதிமன்றம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் என எதிர் பார்க்கிறோம். ஜனவரி 22 ஆம்தேதி மிக முக்கிய தினமாக அனைவரும் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்” என்றார்.