கடும் எதிர்ப்பை அடுத்து ஏசியாநெட் நியூஸ், மீடியா ஒன் சேனல்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

Share this News:

புதுடெல்லி (07 மார்ச் 2020): மீடியா ஒன் மற்றும் ஆசியா நெட் நியூஸ் சேனல்களுக்கு விதிக்கப்பட்டத் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கலவரத்தை தவறாக சித்தரித்ததாக தகவல் ஒளிபரப்புத்துறை இரண்டு சேனல்களுக்கும் 48 மணி நேர தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இரு சேனல்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சென்னை பத்திரிகையாளர்கள் மன்றமும், ‘கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதல்’ என்று கண்டனம் தெரிவித்திருந்தது.

இதனை அடுத்து இரு சேனல்களுக்கும் விதிக்கப்பட்டிருந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது. தற்போது இரு சேனல்களும் சேவையை தொடங்கியுள்ளன.


Share this News:

Leave a Reply