முஸ்லிம்களை தவறாகச் சித்தரித்த ரிபப்ளிக் டிவி, நியூஸ் 18 – மன்னிப்பு கேட்டது ரிபப்ளிக் டிவி!

Share this News:

புதுடெல்லி (12 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவலை விட முஸ்லிம்களுக்கு எதிரான பொய் விமர்சனங்களே அதி வேகமாக பரவி வருகின்றன.

அந்த வகையில் அர்ணாப் கோஸ்வாமி தலைமை ஆசிரியராக பணிபுரியும் ரிபப்ளிக் டிவி முதலிடம் வகிக்கிறது. முஸ்லிம்களை தவறாக சித்தரிப்பதில் அர்ணாப் முதலிடம் வகிக்கிறார். பலமுறை உண்மைக்குப் புறம்பான தகவல் என்று நிரூபணம் ஆனாலும் தொடர்ந்து இத்தகைய செயல்களில் அர்னாப் ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்நிலையில்தான் ரிபப்ளிக் டிவியின் ஒரு விவாத நிகழ்ச்சியில் ஜமியத்துல் இஸ்லாமி இந்தியாவின் தலைவர் மவுலானா ஜலாலுத்தீன் உமரியை தீவிரவாதி என சித்தரித்து கூறியது. அதுமட்டுமல்லாமல், முகேஷ் அம்பானியின் நியூஸ் 18 தொலைக்காட்சி, மூன்று இஸ்லாமிய புனிதத் தளங்களை தவறாக சித்தரித்து பொய்யான தகவல் வெளியிட்டது. இவை இந்திய முஸ்லிம்களை கொந்தளிக்க வைத்தன.

இவ்விவகாரத்தை கையில் எடுத்த அகில இந்திய தனியார் சட்டவாரியம், இரண்டு சேனல்களுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, உடனடி மன்னிப்பு கோர வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதற்கான கடிதத்தை இரண்டு சேனல்களுக்கும் அனுப்பி வைத்தது.

இதனை அடுத்து ரிபப்ளிக் டிவி தனது தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளது. இதுகுறித்து ரிபப்ளிக் டிவி அவர்களது சமூக வலைதள பக்கத்தில் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டது.

இந்த மன்னிப்புச் செய்தி, கடந்த 2019 ஆம் வருடம் மார்ச் மாதம் வெளியானது என்றாலும், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ரிபப்ளிக் டிவி சமீபத்தில் முஸ்லிம்கள் மீது வன்மத்துடன் மேன்மேலும் பரப்பி வரும்  விஷமப் பிரச்சாரத்தால், முந்தைய மன்னிப்பு விவகாரம் மீண்டும் எழுப்பப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.


Share this News:

Leave a Reply