இந்து அமைப்பினரால் கோவில் அருகே இருந்த தேவாலயம் செட் இடித்து தகர்ப்பு!

Share this News:

எர்ணாகுளம் (25 மே 2020): சினிமா படபிடிப்பிற்காக கோவில் அருகே போடப்பட்டிருந்த சர்ச் செட் இடிக்கப்பட்டது.

பிரபல மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸ். இவர் ‘மின்னல் முரளி’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். ஸ்னேகா பாபு, அஜு வர்க்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன், பைஜூ சந்தோஷ் உட்பட முன்னணி நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தை, பிரபல இயக்குநர் பேசில் ஜோசப் இயக்கி வருகிறார்.

இந்த படத்துக்காக எர்ணாகுளம் அருகே காலடி மகாதேவர் கோயில் முன் தேவாலயம் வடிவில் செட் அமைக்கப்பட்டது. லாக்டவுனுக்கு முன்பே போடப்பட்ட இந்த செட், லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் படப்பிடிப்பு இதுவரை நடத்தப்படாமல் இருந்தது. இதற்கிடையே கோயில் முன் சர்ச்சுக்கான செட் போட இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக போராட்டமும் நடந்தது. இந்த நிலையில் நேற்று இந்த செட்டை ஒரு கும்பல் சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேவாலயம் செட் இடிக்கப்பட்டதற்கு ‘மின்னல் முரளி’ பட இயக்குநர் பேசில் ஜோசப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Share this News: