தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

Share this News:

சென்னை (25 மே 2020): தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 805 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் “தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,731 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 407 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 118-ஆக உயர்ந்துள்ளது.” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,31,868-லிருந்து 1,38,845-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,867-லிருந்து 4,021-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 54,441-லிருந்து 57,721-ஆக உயர்ந்துள்ளது.


Share this News: