பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட பெண்ணை கொலை செய்தால் ரூ 10 லட்சம் – ராம் சேனா அறிவிப்பு!

Share this News:

பெங்களூரு (22 பிப் 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட கூட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட பெண்ணை கொலை செய்தால் ரூ 10 லட்சம் பரிசு என்று ராம்சேனா அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பெங்களூரில் குடியுரிமைசட்ட எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. அமுல்யா என்ற பெண் இந்துஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டார். இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த கூட்டத்தில் அசாதுத்தீன் உவைசியும் கலந்து கொண்டார். ஆனால் அந்த பெண்ணின் கோஷத்தை கடுமையாக கண்டித்த உவைசி, “அமுல்யாவின் பேச்சு ஏற்கக் கூடிய செயலல்ல” என்றார். அமுல்யா தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்நிலையில் ராம்சேனா அமைப்பின் நிர்வாகி சஞ்சீவ் மராடி வெளியிட்டுள்ள வீடியோவில் , அமுல்யா சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டால் கொல்லப்படுவார் என்றும், அவரை கொலை செய்பவர்களுக்கு ரூ 10 லட்சம் பரிசு என்றும் பேசியுள்ளார்.

இவ்விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply