புதுடெல்லி (17 டிச 2020): யோகி ஆதித்யநாத் அரசு டாக்டர். கபீல்கான் மீது சுமத்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை (என்எஸ்ஏ) ரத்து செய்ததற்கு எதிராக உ.பி. அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
டாக்டர் கபில் கான் மீது சுமத்தப் பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் செல்லாது என அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை ரத்து செய்யக் கோரி உத்தரபிரதேச அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அலிகார் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த உபி அரசு . கபீல் கான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டி சிறையில் அடைத்தது. ஆனால் அலகாபாத் உயர்நீதிமன்றம் டாக்டர் கபில்கான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து, கபீல் கான் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.
ஆனால் உ.பி. அரசு இந்த உத்தரவை எதிர்த்து யோகி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம் அலகாபாத் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.