உத்திர பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாத சிறுவன் மீது பள்ளி மேலாளர் கொடூர தாக்குதல் – அதிர்ச்சி வீடியோ!

Share this News:

லக்னோ (13 பிப் 2023): த்தரபிரதேச மாநிலம், மேஜா நகரில் கட்டணம் செலுத்தத் தவறியதாகக் கூறி எட்டு வயது சிறுவனை பள்ளி மேலாளர் அடித்து துன்புறுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட யோகேஷ் குப்தா அவரை ஒரு தடிமனான குச்சியால் அடிக்கும் போது குழந்தை பெஞ்சில் படுத்திருப்பதைக் வீடியோவில் காணலாம்.

தற்போது குற்றவாளி 28 வயது யோகேஷ் குப்தா என்ற் பள்ளி மேலாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

https://twitter.com/i/status/1624801660647395328

“இந்த சம்பவம் மூன்று நான்கு மாதங்களுக்கு முன் நடந்தது. சிறுவன் கட்டணம் செலுத்தாததற்காக அடிக்கப் பட்டுள்ளார். ஆரம்பத்தில், குழந்தையின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் கொடுக்க தயங்கியுள்ளனர். பின்பு பல முயற்சிகளுக்குப் பிறகு பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து யோகேஷ் குப்தா கைது செய்யப்பட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply