புதுடெல்லி (11 டிச 2019): குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் ஞாயிறன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் அதிகாரப்பூர்வ பத்திரி கையான ‘சாம்னா’வில் கடுமையாக சாடியிருந்தது. தீவிர இந்துத்வா கொள்கையுடன் செயல்படும் சிவசேனாவின் கருத்தை பலரும் வரவேற்றிருந்தனர்.
இந்நிலையில் அந்த நிலைபாட்டை மாற்றிக் கொண்டு, நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் “நாங்கள் தேச நலனிற்காக மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
சிவசேனாவின் இந்த திடீர் பல்டி சரத்பவார் உள்ளிட்டவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.