சிட்னி (08 ஜன 2020): கடும் வறட்சி காரணமாக சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இதனால் அங்கு கடுமையான வறட்சியும் ஏற்பட்டுள்ளது. வெப்பத்தால் ஆஸ்திரேலிய வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. மாதக்கணக்காக அவற்றை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினரும் மீட்பு படையினரும் போராடி வருகின்றனர். இந்த காட்டுத் தீயில் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான வன விலங்குகள் கருகி உயிரிழந்துள்ளன.
இந்த தீயால் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனையை சமாளிக்க அப்பகுதியில் உள்ள பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அப்பகுதி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
இதற்கான உத்தரவை ஆஸ்திரேலிய அரசு பிறப்பித்துள்ளது.