புதுடெல்லி (02 பிப் 2020): காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
சோனியா காந்தி காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
அவருக்கு அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.