திருவனந்தபுரம் (03 பிப் 2020): கேரளாவில் மூன்றாவது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தற்போது சீனாவை தொடர்ந்து ஆசியாவின் பிற நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. அது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறிப்பாக கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.இவர் கொரோனா வைரஸ் உருவான வுஹன் நகரத்தில் உள்ள வுஹன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அங்கிருந்து கடந்த வாரம் கேரளா திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. அதன்பின் இவர் சில வாரங்களுக்கு முன் சீனா சென்று வந்துள்ளார். பணி நிமித்தமாக சீனா சென்றுள்ளார். அதன்பின் இந்த வாரம் தொடக்கத்தில் அவர் இந்தியா வந்துள்ளார்.
அதன்பின் இவருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் தற்போது மூன்றாவது நபருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. காசர்கோடு அருகே இளைஞர் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நடத்தப்பட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டது. கேரளா மருத்துவர்களை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.