கொராட் (08 பிப் 2020): தாய்லாந்தில் பொதுமக்கள் மீது ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பாங்காக்கில் உள்ள கொராட் என்ற இடத்தில் புத்தமத கோவில் மற்றும் உள்ள வணிகவளாகம் அருகே ராணுவ வீரர் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலரை கொலையாளி பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிணைக்கைதிகளை கட்டடத்திற்குள் அழைத்து சென்ற பிறகும் துப்பாக்கி சத்தம் கேட்டதாக தெரிகிறது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது கொலை குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.