திருவனந்தபுரம் (12 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் தொடங்கி உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் அதிக அளவில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக கொரோனா வைரஸ் நோய் தொற்றால் கேரளத்தில் 17 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் ஒருவர் துபையில் இருந்து வந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அவர் கண்ணூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இரண்டாவது நபருக்கு இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டது. அவர் கத்தாரில் இருந்து வந்துள்ளார். தற்போது அவர் திருச்சூரில் உள்ளார். இதனை கேரள முதல்வர் பிணராயி விஜயன் உறுதி செய்துள்ளார். இதற்கிடையே, 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். என்பதையும் முதல்வர் பிணராயி விஜயன் உறுதி செய்துள்ளார்.