அடுத்த பிரதமர் யார்? – அமித்ஷா பதில்!

Share this News:

புதுடெல்லி (18 ஜன 2023): பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலைமையும், நட்டாவின் அமைப்புத் திறமையும் பாஜகவை மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு கொண்டு வரும் என்று அமித் ஷா கூறினார்.

2023ல் ஒன்பது மாநிலங்களில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலையும், அடுத்த லோக்சபா தேர்தலையும் நட்டா தலைமையில் பா.ஜ., சந்திக்கும்.நட்டா தலைமையில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக அமித்ஷா கூறினார்.

குஜராத்தில் பெற்ற வெற்றி. ஹரியானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கோவா போன்ற மாநிலங்களிலும் நட்டாவின் தலைமையில் சிறப்பாக பஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவில் அடிமட்டத்தில் இருந்து தேசிய மட்டம் வரை பதவி வகிக்கின்றனர். என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply