லக்னோ (25 அக் 2020): ஹத்ராஸ் கூட்டு வன்புணர்வு வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹத்ராஸ் வழக்கை விசாரித்து வந்த மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவில் அங்கம் வகித்த டி.ஐ.ஜி சந்திர பிரகாஷின் மனைவி புஷ்பா பிரகாஷ். அவருக்கு வயது 36. இவர் லக்னோவின் கோல்ஃப் சிட்டி பகுதியில் புஷ்பா தனது அறையில் மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், எனினும் சிகிச்சை உயிரிழந்தார்.. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும் தற்கொலைக்கான காரணம் எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
ஐ.பி.எஸ் அதிகாரியான சந்திரபிரகாஷ் தற்போது உன்னாவோவில் பணிபுரிகிறார். ஹத்ராஸில் வன்புணர்ந்து கொல்லப்பட்ட சிறுமியின் உறவினர்கள் போலிஸ் விசாரணையை நம்பவில்லை என்று கூறியதையடுத்து இந்த சிறப்பு குழு அமைக்கப்பட்டது. குழுவில் சந்திரபிரகாஷ் உட்பட மூன்று பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.