பெண் காவலர்கள் நடனமாடியதால் பணியிடை நீக்கம் – வீடியோ!

Share this News:

அயோத்தி (16 டிச 2022): உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமஜென்மபூமி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் காவலர்கள் பேஜ்பூரி பாடலுக்கு நடனமாடியதை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடன வீடியோ வைரலானதை அடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டது. 4 பேர் அதிகாரப்பூர்வமாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கான்ஸ்டபிள்கள் கவிதா படேல், காமினி குஷ்வாஹா, காஷிஷ் சாஹ்னி மற்றும் சந்தியா சிங் ஆகியோர் சீருடை அணியாமல் சாதாரண உடையில் நடனமாடியுள்ளனர்.

இதனை அடுத்து இவர்களை சஸ்பெண்ட் செய்து மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) முனிராஜ் ஜி உத்தரவிட்டார்.

வியாழக்கிழமை கூடுதல் எஸ்பி (பாதுகாப்பு) பங்கஜ் பாண்டே சமர்ப்பித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.


Share this News:

Leave a Reply