துபாய் (03 ஜுலை 2021): எக்ஸ்போ 2020 க்கு துபாய் நகரம் தயாராகி வருகிறது.
துபாய் எஸ்போ 2020 வரும் அக்டோபர் 1 ஆம் தேதி (2021) முதல் நடைபெறவுள்ள நிலையில் அதன் முனேற்பாடுகளை அதன் பிரதிநிதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
துபாயின் மகுட இளவரசரும் செயற்குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையிலான ஏற்பாட்டுக் குழு எக்ஸ்போ 2021 முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தது.
இந்த ஏற்பாடுகள் குறித்து ஷேக் ஹம்தான் மேலும் கூறுகையில், “உலகளாவிய பாதுகாப்புத் தரங்களால் குறிக்கப்பட்ட சூழலில் இந்த கண்காட்சி நடைபெறும். , அனைத்து உறுப்பினர்களும் சிறப்பான எக்ஸ்போவுக்குத் தயார் படுத்தும் வகையில் தங்கள் முயற்சியைச் செய்வார்கள் என்று தான் எதிர்பார்க்கிறேன்.
அக்டோபர் 1 முதல் இயங்கும் ஆறு மாத ‘துபாய் எக்ஸ்போ 2020 ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கோவிடுக்குப் பிறகு உலகின் முதல் உலகளாவிய பெருவிழாவாக இந்த எக்ஸ்போ இருப்பதால் இதில் கலந்துகொள்பவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. “என்றார்.
உலகின் 192 நாடுகளிலிருந்து பல மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் எக்ஸ்போ 2021 க்கு எதிர் பார்க்கப்படுகிறார்கள்