பிரமாண்டமாகத் துவங்கியது கத்தார் உலகக் கால்பந்து போட்டி!

Share this News:

கத்தார் (தோஹா): உலகக் கோப்பை கால்பந்து போட்டி (FIFA World Cup 2022) கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நேற்று இரவு (21-11-2022) தொடங்கியது.

துவக்க நிகழ்ச்சியாக கே-பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக் மற்றும் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கத்தார் மற்றும் எக்வடோர் நாட்டிற்கு இடையிலான குரூப் ஏ-வின் முதல் போட்டிக்கு முன்பாக கத்தார் ரசிகர்கள், அல் கோரில் அமைந்திருக்கும் அல் பைத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைக் கண்டு ரசித்தனர்.

குரூப் ஏ போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஃபிஃபா உலகக் கோப்பையின் பிரதியைச் சுற்றி வானவேடிக்கைகள் வெடித்தன.

ஃபிஃபா உலகக் கோப்பை 2022ஆம் ஆண்டுக்கான குரூப் ஏ போட்டியில், கத்தார் மற்றும் ஈக்வடாருக்கு இடையிலான போட்டியின்போது அல் பைத் மைதானத்தில் நடைபெற்றது.


Share this News:

Leave a Reply