ஜித்தா (13 ஜன 2023): ஜித்தா விமான நிலையத்திலிருந்து மக்கா மஸ்ஜிதுல் ஹராமுக்கு இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் முதல் எண் டெர்மினலில் இருந்து மக்கா ஹரமிற்கு இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இலவச பேருந்து சேவை உம்ரா மற்றும் ஹஜ்ஜிற்காக இஹ்ராமில் வரும் யாத்ரீகர்களுக்கு மட்டுமே இருக்கும் என்று கிங் அப்துல் அசீஸ் ஏர்போர்ட் நிர்வாகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
அதேபோல சவூதிக்கு வெளியிலிருந்து வரும் யாத்ரீகர்களும் இந்த இலவச பேருந்து வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினர் அடையாள அட்டையைக் காட்டினால் போதும்.
. தினமும் காலை 10 முதல் இரவு 10 வரை இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை இந்த இலவச பேருந்து சேவை நடைபெறும். என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.