துபாய் (13 ஜன 2023): துபாயின் முக்கிய சாலைகளில் வாகனங்களின் வேக வரம்பை துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் குறைத்துள்ளது.
தற்போதுள்ள அதிகபட்ச வேகமான 100 கிமீ வேகம் மணிக்கு 80 கிமீ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளதாக துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
துபாய் காவல்துறை தலைமையகம் மற்றும் துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் இணைந்து இந்த புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.
100 கிமீ வேக வரம்புடன் முந்தைய பலகைகளுக்குப் பதிலாக 80 கிமீ என்ற புதிய பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.