ரியாத் (09 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் உள்ள நான்கு விமான நிலையங்களில் பெண் டாக்சி ஓட்டுனர்களை நியமிக்கவும், பெண்களுக்காக சிறப்பு பாதை அமைக்கவும் போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக ரியாத், ஜித்தா, தம்மாம் மற்றும் மதீனா விமான நிலையங்களில் பெண் ஓட்டுனர்களின் சேவை புரிவர்.
இரண்டாவது கட்டத்தில், இந்தத் திட்டம் சவூதியில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இது தொடர்பாக விமான நிலைய டாக்ஸி நிறுவனங்களுடன் போக்குவரத்து ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது 80 பெண்கள் நியமிக்கப்பட உள்ளனர்.