ரகசிய கேமராவில் சிக்கிய பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் சேத்தன்குமார் சர்மா!

Share this News:

புதுடெல்லி (15 பிப் 2023): பிசிசிஐயின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன்குமார் சர்மா தனியார் தேசிய ஊடகம் நடத்திய ரகசிய கேமரா நடவடிக்கையில் சிக்கியுள்ளார்.

பிசிசிஐ அணிக்கு சேத்தன் சர்மா தேர்வு செய்யும் அணி குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனை அடுத்து அவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் ரோஜர் பின்னி தலைமையில் புதிய நிர்வாகம் வந்தவுடன் எந்தப் பதவியில் இருந்து சேத்தன் சர்மா நீக்கப்பட்டாரோ தற்போது அதே பதவிக்கு வந்துள்ளார்

இந்நிலையில் ஒரு தேசிய ஊடகம் நடத்திய ரகசிய கேமரா நடவடிக்கையின் வீடியோவில் அவர் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பிசிசிஐ அணியில் போதை ஊசி போடும் வீரர்கள் இருப்பதாக சேத்தன் ஷர்மா தீவிர தகவலை தெரிவித்துள்ளார். 80-85 சதவீத உடற்தகுதி உள்ளவர்கள் ஊசி போட்ட பின்னரே போட்டியில் நுழைவார்கள் என்றும், அணி மருத்துவர்களைத் தவிர, அனைத்து வீரர்களுக்கும் தனிப்பட்ட மருத்துவர்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கங்குலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் , சேத்தன் சர்மா கூறியிருப்பது அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதேபோன்று சேத்தன் சர்மா அந்த வீடியோவில் பல வீரர்கள் காயம் முழுமையாக குணமடையாத நிலையில் மீண்டும் அணிக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் சில வீரர்கள் ஸ்டெராய்டு ஊசியை செலுத்தி கொண்டு உடல் தகுதியை எட்டி அணிக்குள் நுழைந்து வருவதாகவும் சேத்தன் சர்மா அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காவிட்டால், சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வரும் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் அவர்கள் அதைக் கருத்தில் கொள்ளவில்லை என்றும், பெரும்பாலான தேர்வாளர்கள் கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷானை பரிந்துரைக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே பிசிசிஐ மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில், சேத்தன் சர்மாவின் இந்த வீடியோ இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *