மாரத்தான் போட்டியில் அசத்திய முதியவர் ஷஹாபுத்தீன்!

Share this News:

அதிராம்பட்டினர்ம் (31 டிச 2022): தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்துகொண்டு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளில் பங்கேற்றனர்.

இந்நிலையில் இதில் குறிப்பாக 65 வயது முதியவர் வழக்கறிஞர் ஷிஹாபுத்தீன் கலந்துகொண்டு முழுமையாக ஓடி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இறுதிவரை ஓடியும் அவர் முகத்தில் களைப்பைக் காட்டிக் கொள்ளவே இல்லை.

இவர் மறைந்த முன்னாள் மயிலாடுதுறை எம்.எல்.ஏ அபுல்ஹசன் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply