புதுடெல்லி (30 டிச 2022): – இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கார் விபத்தில் காயமடைந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வங்கதேச சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பிய ரிஷப், புதுதடெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ரூர்க்கியில் உள்ள ஹம்மத்பூர் ஜல் அருகே நர்சன் எல்லையில் இந்த விபத்து நடந்தது. விபத்தில் வாகனம் தீப்பிடித்து எரிந்தது. மெர்சிடிஸ் காரை ரிஷப் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. காரின் வெளிப்பகுதி கடுமையாக எரிந்துள்ளது.
Rishabh Pant Injured In Car Crash, Dozed Off While Driving https://t.co/20cx5etJNe pic.twitter.com/bMamPTdLXQ
— NDTV (@ndtv) December 30, 2022
எனினும் ரிஷப் பந்துக்க்க் காயம் பெரிதாக இல்லை என்று டாக்டர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் உடனடியாக புதுடெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுவார் என கூறப்படுகிறது.
25 வயதான அவர் இலங்கைக்கு எதிரான தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த தொடர் ஜனவரி 3ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.